பல்லவி இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு நாள் முழுதும் என்னை வழி நடத்து சரணம் 1 உன் திருப்பெயர் நான் பாடிடும் நேரம் உன் திரு இதயம் பேரானந்தம் உன் திரு வாழ்வெனக்கருளும் இறைவா இறைவா உன் திரு நிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பாய் சரணம் 2 இயேசுவின் பெயருக்கு மூவுலகனைத்தும் இறையடி பணிந்து தலைவணங்கிடுமே இயேசுவே உன் பெயர் வாழ்க வாழ்க வாழ்க இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே
Comments
Post a Comment