Posts

இயேசுவே என்னுடன்

பல்லவி இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு  நாள் முழுதும் என்னை வழி நடத்து சரணம் 1 உன் திருப்பெயர் நான் பாடிடும் நேரம் உன் திரு இதயம் பேரானந்தம் உன் திரு வாழ்வெனக்கருளும் இறைவா இறைவா உன் திரு நிழலில் நான் குடிகொள்ள‌ என்றும் என்னுடன் இருப்பாய் சரணம் 2 இயேசுவின் பெயருக்கு மூவுலகனைத்தும் இறையடி பணிந்து தலைவணங்கிடுமே இயேசுவே உன் பெயர் வாழ்க‌ வாழ்க வாழ்க‌ இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே

இயேசு அழைக்கிறார்

பல்லவி இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்  சரணங்கள் 1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்  என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்  எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்  கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு  4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு